செய்திகள் :

கழிவறை பிரச்னையால் பாட்டில்களில் சிறுநீர் கழித்த பயணிகள்; பறக்கும் விமானத்தில் என்ன நடந்தது?

post image

விர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானத்தில் பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலியில் உள்ள டென்பசார் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற விமானத்தில்தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்று பராமரிப்பு பிரச்னை காரணமாகப் புறப்படும் முன்பே அதன் பயன்பாட்டை இழந்திருக்கிறது. மீதமுள்ள கழிப்பறைகளும் ஆறு மணி நேரப் பயணத்திற்குள் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமானத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

விமானம்
விமானம்

விமான கழிப்பறையை அணுக முடியாமல் தவித்த பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தி ஆஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் அந்த விமானத்தில் பயணிகள் அசௌகரியமான சூழலை எதிர்கொண்டுள்ளனர். சிறுநீர் நாற்றம் தாங்க முடியாமல் பலரும் தவிர்த்து உள்ளனர்.

இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் நிலைமையே சமாளித்த குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதாகவும் விமான நிறுவனம் உறுதி அளித்துள்ளது..

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். இன்னும் சொல்லபோனால் குழந்தைகளைப் போன்று அதனை பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் சீன யூடிபர் ஒருவர் ப... மேலும் பார்க்க

பேத்தியின் 23 வயது வகுப்பு தோழனை விரும்பும் 83 வயது மூதாட்டி - இரு குடும்பமும் ஆதரவு என நெகிழ்ச்சி!

23 வயதான இளைஞரை 83 வயதான மூதாட்டி ஒருவர் விரும்புவதாக தெரிவித்துள்ள சம்பவம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக டேட்டிங் செய்து வரும் இவர்களின் காதல் கதை எங்கிருந்து தொடங்கியது என்ப... மேலும் பார்க்க

”எப்போதும் போல தான் இரை வைத்தேன்; ஆனால் இந்த முறை...”- நீல நிறத்தில் முட்டை இட்ட கோழி; பின்னணி என்ன?

கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான கோழி நீல நிறத்தில் முட்டையிடுவதாக கூறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருக... மேலும் பார்க்க

சீனா: "என் கணவருடன் 5 வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி" - தோழிக்கு பேனர் வைத்த மனைவி; பின்னணி என்ன?

”கணவருடன் ஐந்து வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி” என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தொங்கவிட்டு சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கவனம் பெற்றுவருகிறார்.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் தன... மேலும் பார்க்க

`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் நடிகர் பவன் சிங். இவரும் அஞ்சலி ராகவ்வும் நடித்த பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் பவன் சிங் தனது அனுமதி இல... மேலும் பார்க்க

90-களின் நாஸ்டால்ஜியாவை ஞாபகப்படுத்த பேட்டரி சுவையில் சிப்ஸ் அறிமுகம் - எப்படி இருக்கும்?

வித்தியாசமான உணவு அனுபவங்களைத் தேடும் உணவு ஆர்வலர்களுக்காகவே ரிவைண்ட் (Rewind) என்ற பிராண்ட், 9-வோல்ட் பேட்டரி சுவையில் சிப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிப்ஸ் பேட்டரியை நாக்கால் தொடும்போது ஏற்படும... மேலும் பார்க்க