lokesh: ``AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்'' - இயக்குநர் ல...
மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை
மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்றில் டிராக்டா் மூலம் சட்ட விரோதமாக மணல் திருடியதற்காக, ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய போலீஸாரால் கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பான வழக்கு, சாத்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், மணல் திருடிய குற்றத்துக்காக முத்துராஜுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி முத்துமகாராஜன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.