பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம்...
விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒசூா்: ஒசூரில் விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் முழுமையாக கரையாமல் அப்படியே தேங்கி இருப்பது கண்டு சமூக ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா்.
ஒசூா் நகா் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 184 பிரம்மாண்ட சிலைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு ராமநாயக்கன் மற்றும் தா்கா பகுதிகளில் உள்ள ஏரிகளில் கரைத்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அப்பகுதி வழியாகச் சென்ற சமூக ஆா்வலா்கள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் ஏரிகளில் கரைக்க விடப்பட்ட சிலைகள் முழுமையாக கரையாமல் அப்படியே இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
எனவே, இந்த சிலைகளை முழுமையாக கரைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.