செய்திகள் :

வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?

post image

இந்தியா - அமெரிக்கா இடையே வரி, வர்த்தகப் பிரச்னை பூதாகரமாகப் போய் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ராணுவக் கூட்டுப் பயிற்சிக்காக இந்திய ராணுவம் அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு சென்றுள்ளது.

எதற்காக?

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்திய ராணுவப் பிரிவு ஒன்று, அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வெயின்ரைட் முகாமிற்கு 'யுத் அப்யாஸ் 2025' என்ற ராணுவக் கூட்டுப் பயிற்சிக்காக சென்றுள்ளது. இது செப்டம்பர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மோடி-ட்ரம்ப்
மோடி-ட்ரம்ப்

அமெரிக்காவின் 11-வது ஏர்போர்ன் பிரிவின் வீரர்களுடன் இணைந்து, இந்திய ராணுவ வீரர்கள் ஹெலிபோர்ன் நடவடிக்கைகள், மலைப்போர் முறை, ஆளில்லா வான்வழி அமைப்பு (UAS) / கவுண்டர்-UAS மற்றும் கூட்டுத் தந்திரப் பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர். இது இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.

உலக நாடுகளுக்கிடையே இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவது இயல்பு தான். ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு சரியில்லாத இந்த நேரத்தில், இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் கூட்டு ராணுவப் பயிற்சி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

US: ``இந்தியா இங்கே நிறைய விற்கிறது; அமெரிக்காவால் இந்தியாவில் விற்க முடியவில்லை'' -ட்ரம்ப் காட்டம்

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தக காரணமாக, இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி சில நாள்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது.இவ்வாறிருக்கும் நிலையில், சீனாவில் நடைபெற்ற... மேலும் பார்க்க

``பொருளாதார சுயநல சவால்களை தாண்டி, இந்தியா 7.8% வளர்ச்சி'' - ட்ரம்பிற்கு மோடி மறைமுகக் குட்டு

இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதற்கு முன்னர், ட்ரம்ப் இந்தியா மற்றும் ரஷ்யாவை 'இறந்த பொருளாதாரங்கள்' என்று... மேலும் பார்க்க

``டிடிவி தினகரன் எங்களுடன்தான் இருக்கிறார்; யாருக்கும் சந்தேகம் தேவையில்லை'' - நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணிநெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினர் நாகேந்திரன்,"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்க... மேலும் பார்க்க

``நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தம்'' – செல்வப்பெருந்தகை

நெல்லையில் காங்கிரஸ் மாநாடுநெல்லையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.பின்னர் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

``புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மக்களுக்கு பாதிப்பு'' - சொர்ணாவூர் அணையை கட்ட விவசாயிகள் கோரிக்கை

சொர்ணாவூர் அணைகர்நாடக மாநிலம் நந்திதுர்கம் பகுதியில் உருவாகும் தென்பெண்ணை ஆறு சுமார் 400 கிலோமீட்டர் பயணித்து கடலூரில் வங்கக் கடலில் கலக்கிறது. இந்த தென்பெண்ணை ஆற்றின் நீரினை தேக்கி வைத்து பயன்படுத்து... மேலும் பார்க்க

`மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்' வாபஸ் பெற்றது ஏன்? - சசிகாந்த் செந்தில் விளக்கம்

உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.இதை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங... மேலும் பார்க்க