செய்திகள் :

கண்ணப்பா ஓடிடி தேதி!

post image

பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக எடுக்கப்பட்டது.

சிவ பக்தரின் கதையாக உருவான படமென்பதால் இதன் வணிக நோக்கிறாக இந்தியளவில் பிரபலமான நடிகர்கள் பிரபாஸ், மோகன் லால், அக்‌ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால் இளம் நாயகி ப்ரீத்தி முந்தன், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், மோகன் பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

ஆனால், படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ரூ. 40 கோடி மட்டும் வசூலித்து மிகப்பெரிய தோல்விப்படமானது.

இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற செப். 4 ஆம் தேதி தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிம்புவுடான படத்தில் தனுஷ் நடிப்பாரா? வெற்றி மாறன் பதில்!

kannappa movie ott release date has been announced

பிக் பாஸ் 9 போட்டியாளராகும் சின்ன திரை நடிகை?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலியும் பங்கேற்கவுள்ளதாகக் க... மேலும் பார்க்க

போதிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகும் மதராஸி!

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரைக்கு வருகிறது.ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதரா... மேலும் பார்க்க

அடுத்தடுத்து பெரிய படங்கள்! பான் இந்திய ஸ்டாராகும் ருக்மணி வசந்த்!

நடிகை ருக்மணி வசந்த் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்... மேலும் பார்க்க

லைக் மழை! 10 கோடி பார்வைகளைக் கடந்த சின்மயி மேடைப் பாடல்!

தக் லைஃப் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜு... மேலும் பார்க்க

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

ஆல்யா மானசா நடிக்கும் புதிய தொடரான பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. முன்னதாக சன் தொலைக்காட்... மேலும் பார்க்க

மீண்டும் விஜய்சேதுபதி! பிக்பாஸ் 9 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப... மேலும் பார்க்க