Passport: இணையவாசிகளிடையே கவனம் பெறும் நூற்றாண்டு பழைய பிரிட்டிஷ் இந்திய பாஸ்போர்ட்!
விமானத்தில் பயணிப்பதற்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்றாக உள்ளது. முன்பெல்லாம் விமான போக்குவரத்து அரிதாக காணப்பட்ட நிலையில், தற்போது உள்நாடு, வெளிநாடு என பலரும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானத்தில் பயணம் செய்கின்றனர்.
இப்போது இருக்கும் பாஸ்போர்ட்டுகள் பல்வேறு நிறங்களில் உள்ளன.100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாஸ்போர்ட் எப்படி இருந்தது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?
சமீபத்தில் 1926 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படும் பிரிட்டிஷ் இந்திய பாஸ்போர்ட் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது.
இந்த வின்டேஜ் பாஸ்போர்ட், இன்று நாம் காணும் பாஸ்போர்ட்டுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
இந்த பாஸ்போர்ட் நவம்பர் 23 1926 அன்று வழங்கப்பட்டிருக்கிறது. அந்த பாஸ்போர்ட்டில் இப்போது இருப்பது போலவே தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த சமயத்தில் இந்தியாவின் காலனித்துவ நிலையை பிரதிபலிக்கும் வகையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை ’பிரிட்டிஷ் பாதுகாக்கப்பட்ட நபர்’ என்று விவரித்ததாக கூறப்படுகிறது.
பாஸ்போர்ட் விதிமுறைகளும் அதில் இடம்பெற்ற உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பாஸ்போர்ட் என்பதால் இணையவாசிகளிடையே கவனம் பெற்று வருகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!