செய்திகள் :

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

post image

திரிபுராவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திப்ரா மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தெலங்கானா ஆளுநர் மகனிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் திப்ரா மோத்தா கட்சி (டிஎம்பி) எம்.எல்.ஏ.வான பிலீப் ரியாங் தெலங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா மகன் பாதிக் தேவ் வர்மா மீது காவல் நிலையத்தில் இன்று(செப். 2) புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாதிக் தேவ் வர்மா, அவருடன் சேர்த்து 4 நபர்கள் பிலீப் ரியாங்கையும், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேற்கு திரிபுராவிலுள்ள எம்.எல்.ஏ. விடுதியில் திங்கள்கிழமை (செப். 1) நள்ளிரவில் பிலீப் ரியாங்கைக் கொல்ல சதி நடந்திருப்பதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அந்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த தெலங்கானா ஆளுநர் மகன் பாதிக் தேவ் வர்மாவும் அவரது கூட்டாளிகளும், பிலீப்பின் குடும்பத்தைக் கொல்ல பாஜகவிலிருந்து 500 ஆள்களை திரட்டி வருவோம் என்று பகிரங்கமாக எச்சரித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தெலங்கானா ஆளுநர் மகன் மீது நடவடிக்கை பாயும் என்று காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்திருப்பதாக பிலீப் ரியாங் செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார். ஜிஷ்ணு தேவ் வர்மா திரிபுராவின் முன்னாள் துணை முதல்வர் பதவி வகித்தவரும்கூட.

இவ்விவகாரத்தில் பாஜக தரப்பிலிருந்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

MLA of Tripura's BJP ally accuses Telangana Guv's son, others of threatening to kill him

பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்- காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹா்மீத்சிங் பதான்மாஜ்ராவை காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக ‘கபாஸ் கிஸான்’ என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். சுயமாக பதிவு... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிக நிவாரண நிதி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

‘மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் வட மாநிலங்களுக்கு அரசியல் பாரபட்சமின்றி அதிகப்படியான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

அரிய வகை கனிமங்கள்: திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க

பிகார் தாய்மார்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவமரியாதையாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு பிகார் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பிகாரில்... மேலும் பார்க்க