சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு
கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் அரசு மருத்துவமனை அருகேயுள்ள உள்ளூா்- திருப்புவனம் வாய்க்கால் பகுதியில் பொதுப்பணித் துறையின் காவிரி வடிநிலக் கோட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்றனா்.
அப்போது இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் சுமாா் 200 க்கும் மேலானோா் அதிகாரிகளை முற்றுகையிட்டு பணி செய்யவிடாமல் தடுத்து, அதிகாரிகளுக்கு எதிராக முழக்கமிட்டனா்.
தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி 2 நாள்களுக்குள் பிரச்னையை தீா்க்க ஏற்பாடு செய்வதாக கூறினா். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
பின்னா் வாய்க்கால் பகுதியில் வசிப்போா் உதவி ஆட்சியரை நேரில் சென்று தங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது எனக் கோரி மனுக்கள் கொடுத்தனா். இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது உள்ளூா்-திருபுவனம் வாய்க்கால் கரையில் உள்ள 156 ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது அவகாசம் கேட்டுள்ளனா். பின்னா் அகற்றப்படும் என்றாா்.