செய்திகள் :

Doctor Vikatan: 10 வயது குழந்தைக்கு மலச்சிக்கல்; காரணமும் தீர்வுகளும் என்ன?

post image

Doctor Vikatan: என்னுடைய 10 வயதுக் குழந்தைக்கு  மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வர என்ன காரணம், அதை எப்படிச் சரிசெய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

உணவுப்பழக்கம்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது மிகவும் சகஜமாகப் பார்க்கிற விஷயமாக இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம், அவர்களது உணவுப்பழக்கம்.

நார்ச்சத்து அறவே இல்லாத அல்லது நார்ச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பாதிப்பு வரும். காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவை குழந்தைகளின் தினசரி உணவுப்பட்டியலில் இல்லை என்றால், அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

பால், தண்ணீர் குடிக்கும் அளவு

பொதுவாகவே குழந்தைகளுக்கு அம்மாக்கள் நிறைய பால் கொடுப்பது வழக்கம். அதாவது தினமும் 300 முதல் 400 மில்லி பால் கொடுக்கிறார்கள்.  அதைவிட அளவு தாண்டும்போது, அதுவும் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு காரணமாகலாம்.

குழந்தைகளைப் பொறுத்தவரை தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்கும். தண்ணீர் தவிர்த்து, சூப், ஜூஸ் போன்றவற்றையும் அதிகம் குடிக்க மாட்டார்கள்.  உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதுவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். 

பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் சப்ளிமென்ட்டுகளும் சில நேரங்களில் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு டாய்லெட் டிரெய்னிங் மிக முக்கியம்.  பள்ளிக்கூடங்களில்  கழிவறை பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். இயற்கை உபாதையை அடக்குவதாலும் மலச்சிக்கல் வரலாம்.

எனவே, குழந்தைகளின் உணவில் போதுமான நார்ச்சத்து இருக்க வேண்டும். ஆப்பிள், கொய்யா போன்று தோலுடன் சில பழங்களைக் கொடுக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக்க வேண்டும்.

ஏசி அறையில் இருந்தாலோ, குளிர் காலத்திலோ தாகம் எடுக்காது. அந்தத் தருணங்களில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுத்து, அதை காலி செய்யப் பழக்கலாம். பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வரித்துறை விசாரணை

சுஹானா கான்பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே கடற்கரையோரம் பண்ணை வீடு உள்ளது. அந்த பண்ணை வீடு இருக்கும் பகுதியில், ஷாருக் கான் மகள் சுஹானா கானும் இரண்டு நிலங்களை வாங்கி ... மேலும் பார்க்க

Mumbai: ``மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி'' - உண்ணாவிரதத்தை முடித்த மனோஜ் ஜராங்கே

மராத்தா இட ஒதுக்கீடுமும்பையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல், மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே, மராத்தா சமுதாயத்திற்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர... மேலும் பார்க்க

``ஒன்றுபட்ட அதிமுக?'' - மனம் திறந்து பேசுவதாக அறிவித்த செங்கோட்டையன்: பின்னணி என்ன?

பனிப்போர்அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதை உறு... மேலும் பார்க்க

`பாகிஸ்தானுடன் குடும்ப வணிகத்துக்காக இந்தியாவைத் தூக்கி எறிந்த ட்ரம்ப்' -முன்னாள் NSA குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், வழக்கறிஞருமான ஜேக் சலிவன், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுடனான தனது குடும்பத்தின் வணிக நன்மைக்காக இந்தியாவுடனான உறவை தூக்கி எறிகிறார் என்று விமர்சித்துள்ளார்.ஜோ ... மேலும் பார்க்க

``அரசியலில் தொடர்பு இல்லாத என் அம்மாவை காங்கிரஸ், ஆர்.ஜே.டி அவமதித்தது ஏன்? - பிரதமர் மோடி வேதனை

ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.பீஹாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.தர்பங்காவில... மேலும் பார்க்க

TTV Dhinakaran: ஓரங்கட்டும் NDA; விஜய்க்கு சிக்னல் கொடுக்கும் டிடிவி! - தினகரனின் ப்ளான் என்ன?

ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், முதல்வருடன் சந்திப்பு, மதுரையில் மாநாடு அறிவிப்பு என பரபரப்பு கிளப்பி வந்த ஓ.பி.எஸ் இப்போது கொஞ்சம் அமைதியாகியிருக்கிறார்.ஓ.பி.எஸ் விட்ட இடத்திலிருந்து டிடிவி தினகரன் ... மேலும் பார்க்க