அதிமுக சி. விஜயபாஸ்கர் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தெருநாய் விவகாரம்: `தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க' - எம்.பி கமல்ஹாசன் சொல்வதென்ன?
தமிழ்நாட்டில் தற்போது விவாதமாகியிருக்கும் சிக்கலில் ஒன்று தெருநாய் விவகாரம். இந்தியாவிலேயே ரேபிஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்று.
எனவே தெருநாய்கள் விவகாரத்தில் உடனடியாக தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
அதே நேரம் விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவரிடம் தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,``தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க... விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம், சமூக சுகாதாரம் தெரிந்தவர்களுக்குப் புரியும்.
நமக்காகப் பொதி சுமந்த கழுதைகளை இப்போது காணவில்லையே? கழுதை எங்கே என யாரும் கவலைப்படுகிறார்களா?
எல்லா உயிரினங்களையும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் காப்பாற்ற வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதை பா.ஜ.க டூர் என விமர்சிக்கிறது. ஒருவர் நல்லது செய்யும்பொழுது அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை நான் பார்க்கமாட்டேன்.
நாட்டுக்கு நல்லது நடக்கிறது என்றால் எதிர்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...