இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ...
பஞ்சாபில் வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,
வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் முதல்வர் ஸ்ரீ பகவந்த் சிங் அறிவுறுத்தலின்படி, பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து அரசு/உதவி பெறும்/அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார்ப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் செப்டம்பர் 7, 2025 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் 3 வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் மற்றும் பருவக்கால ஓடைகள் பெருக்கெடுத்து ஓடுவதால் பஞ்சாப் பெரும் வெள்ளத்தை எதிர்கொள்கிறது. பஞ்சாபில் பெய்த மழையும் மாநிலத்தில் வெள்ள நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
பஞ்சாப் முழுவதும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, வெள்ளம் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது.