செய்திகள் :

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

post image

தமிழ்நாடு பேரவைத் தேர்தலையொட்டி உள்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

கூட்டணியைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. ஆனால் இந்த கூட்டணி அறிவித்தது முதலே சில குழப்பங்கள் இருந்து வருகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் 'ஆட்சியில் பங்கு' என பாஜக தலைவர்களும் 'பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைப்போம்' என அதிமுக தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகினார்.

இந்த நிலையில் தில்லியில் இன்று(புதன்கிழமை) பாஜகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தில்லி சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், எச். ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோருடன் அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டணியில் நிலவும் முரண்பாடுகள், தேர்தல் பணிகள், கூட்டணி விரிவாக்கம் ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளது.

"அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தை தொடங்க வேண்டும், ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும், வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும், கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்" என்று அமித் ஷா ஆலோசனை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பாஜகவில் உள்ள உள்கட்சி பூசல்களை களைய வேண்டும். உள்கட்சி பூசல் அதிகரித்து வருவது நல்லதல்ல, அடுத்தாண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்று அமித் ஷா கூறியதாக சொல்லப்படுகிறது.

தில்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. திருமண நிகழ்வுகள் மற்றும் அதிக வேலைகள் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Amit Shah instructs Tamil Nadu BJP leaders to resolve internal party disputes

இதையும் படிக்க | அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக உதவியாளா் காலி பணியிடங்களை ... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்!

விராலிமலை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.தமிழக வருவா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல் மட்டுமே தவிர, புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என விளக்கம் அளித்துள்ளது சுகாதாரத் துறை, மக்கள் அதிகம் கூடும்... மேலும் பார்க்க

இரு காசுகளை விழுங்கிய 2 ஆம் வகுப்பு மாணவி! விரைந்து செயல்பட்டுக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, இரண்டு காசுகளை விழுங்கிய நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் க... மேலும் பார்க்க

யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் புதன்கிழமை பவுன் ரூ.78,4400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிக... மேலும் பார்க்க