வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை
பெங்கால் ஃபைல்ஸ் படத்தை தடை செய்யாதீர்கள்... மம்தா பானர்ஜிக்கு இயக்குநர் வேண்டுகோள்!
பெங்கால் ஃபைல்ஸ் திரைப்படத்தை மேற்கு வங்கத்தில் வெளியிடத் தடை செய்யக்கூடாது என அப்படத்தின் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி பெங்கால் ஃபைல்ஸ்.
இந்திய சுதந்திரத்தின்போது வங்காளத்தில் இந்துகளுக்கு எதிராக ஏற்பட்ட கலரங்களையும் தாக்குதல்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இது, செப். 5 ஆம் தேதி வெளியாகிறது.
காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் போன்றே வலதுசாரி சிந்தனைகளுடன் இப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பதால் இதனை மேற்கு வங்கத்தில் வெளியிட விநியோகிஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து விடியோ வெளியிட்ட படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, “தி பெங்கால் ஃபைல்ஸ் திரைப்படம் மேற்கு வங்கத்தில் தடைசெய்யப்படும் எனக் கூறப்படுகிறது. அரசியல் அழுத்தங்கள் இருப்பதால் வெளியீட்டு உரிமையை வாங்கத் தயங்குகின்றனர். இந்த திரைப்படத்தை இந்தியத் தணிக்கை வாரியம் அங்கீகரித்துள்ளது. நீங்கள் (மம்தா பானர்ஜி) ஒவ்வொரு குடிமகனின் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாப்பேன் என சத்தியம் செய்துள்ளீர்கள். இப்படம் வெளியாக மாநில முதல்வரான மம்தா பானர்ஜி துணை நிற்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: 1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?