கமிந்து மெண்டிஸ் அதிரடி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!
BB: மீண்டும் விஜய் சேதுபதி; `ட்விஸ்ட்' உடைத்த சேனல்! - பிக்பாஸ் சீசன் 9 அப்டேட்
விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிற இந்த நிகழ்ச்சி இதுவரை எட்டு சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளது. ஒன்பதாவது சீசனுக்கான டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. ரோலிங் சேரில் சுழன்றபடி பிக்பாஸ் சீசன் 9 ன் முதல் அப்டேட் தந்திருக்கிறார் `விஜய் சேதுபதி’. இது ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
விஜய் சேதுபதியே மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் என விஜய் டிவியின் தலைமை நிர்வாகி கிருஷ்ணன் குட்டி சில தினங்களுக்கு முன்பே மீடியாவுக்கு அறிவித்துவிட்டார்.
பிக்பாஸ் ஆரம்பித்த காலம் தொட்டு, எல்லாவற்றையும் சஸ்பென்ஸாக வைத்து எதிர்பார்ப்பை எகிற செய்வது தான் வழக்கம். நிகழ்ச்சி குறித்து சிறு தகவல் கூட வெளியில் கசியாது. சமூக ஊடகங்களில்தான் ஆளாளுக்கு போட்டியாளர்கள் பட்டியல் போட்டு பரபரப்புக் கிளப்பிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் சேனலின் இந்த அறிவிப்பே பலருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்தது.
'எப்போதும் இல்லாத இந்தப் புதுப் பழக்கம் ஏன்' என விசாரித்தோம்.
''கிருஷ்ணன்குட்டி சார் மீடியாவுல பேசியது அவர் எடுத்த ஒரு நிர்வாக ரீதியான முடிவு என்றே சொல்லலாம். விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார்னு முன்கூட்டியே அறிவிச்சதன் பின்னணியில் சில விஷயங்கள் இருக்கலாம்னு சொல்றாங்க.
அதாவது சென்ற சீசனைத் தான் தொகுத்து வழங்கவில்லை என அறிவித்த போது நடிகர் கமல், ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், "7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை' எனச் சொல்லியிருந்தார்.
'சிறிய இடைவெளி', 'கனத்த இதயத்துடன்', 'வரவிருக்கும் சீசனை' ஆகிய வார்த்தைகள் 'தற்காலிகமாகவே கமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறார் போல' என்கிற ஒரு தோற்றத்தை பிக்பாஸ் ரசிகர்களிடம் உருவாக்கியதாக அப்போது பேசப்பட்டது.
அதேநேரம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய விதமும் சேனலுக்கும் ரசிகர்களுக்கும் நிறையவே பிடித்து போனது.

இந்த நிலையில் வரும் சீசனுக்கான முதல்கட்ட ஏற்பாடுகள் தொடங்கிய போதே, 'இந்த சீசனை தொகுத்து வழங்கப் போவது யார்? விஜய் சேதுபதியா அல்லது கமல் திரும்பவும் வருவாரா' என்கிற ஒரு கேள்வி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழலாம். அப்படி எழும் பேச்சுகள் நிகழ்ச்சிக்கான வரவேற்பை பாதித்துவிடக்கூடாது. எனவே விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்பதை நாமே சொல்லி விடலாமே' என்ற முடிவை எடுத்திருக்க்கிறார்கள்' என்றார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...