அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், அன்புமணி மீதான ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த அறிக்கையில் ராமதாஸ் அனுமதி இல்லாமல், அன்புமணி ஒரு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, ராமதாஸிற்கு நாற்காலி ஒன்று போடப்பட்டது,

'தடுத்தார், அபகாரித்தார், கைப்பற்றினார்' - அன்புமணி மீது அடுக்கடுக்கான 16 குற்றச்சாட்டுகள்
பாமக தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது, தைலாபுரத்தில் ராமதாஸ் இருக்கைக்கு அருகேயே ஒட்டுக்கேட்பு கருவியைப் பொருத்தியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளக்கம் தர அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இதுகுறித்து அன்புமணி ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த அறிக்கைக்கும், குற்றச்சாட்டிற்கும் எந்தவித பதிலும் இதுவரை அன்புமணி கொடுக்கவில்லை.

இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ், "பாமக தலைமையில் சிறப்புப் பொதுக்குழு வைத்த 16 குற்றச்சாட்டிற்கு அன்புமணி இதுவரை பதிலளிக்கவில்லை. அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. செப்டம்பர் 10ம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என பதிலளிக்க வேண்டும். அன்புமணி பதில் அளிக்காவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs