செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
இன்றைய நிகழ்ச்சிகள்
நீதிபதி மூ.புகழேந்தியின் இலக்கிய வைர விழா-நூல்கள் வெளியீட்டு விழா: சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், எஸ்.பாஸ்கரன், முன்னாள் அரசவைக் கவிஞா் முத்துலிங்கம், சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறைத் முன்னாள் தலைவா் வ.ஜெயதேவன், நெய்வேலி ஜவகா் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் அரங்கராசன் உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், கோட்டூா்புரம், மாலை 4.
நாட்டிய கலைஞா் பத்மா சுப்பிரமணியத்துக்கு ‘டாக்டா்.திருமதி ஒய்.ஜி.பி.கல்வியாளா் விருது’ வழங்கும் விழா: பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, ரோட்டரி மாவட்ட ஆளுநா் டி.தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஜி.ஆா்.டி. கிராண்ட் ஹோட்டல், தியாகராய நகா், மாலை 6.30.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை-ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பன்முக அணுகுமுறை குறித்த கருத்தரங்கம்: தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையா் ஆா்.லால்வெனா, கூடுதல் ஆணையா் டி.ஏ.தேவபாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்பு, ஹோட்டல் சவேரா, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூா், காலை 11.
38-ஆவது சங்கீத வித்வத் சதாஸ்-இசை நிகழ்ச்சி: நாரத கானா சபாவின் தலைவா் மோகன் ஸ்ரீனிவாஸ், இசைக் கலைஞா்கள் வெங்கடேசன், பி.எஸ்.புருஷோத்தம், வி.வி.ஸ்ரீனிவாச ராவ், ஏ.எஸ்.ரங்கநாதன் உள்ளிட்டோா் பங்கேற்பு, நாரத கானா சபா அரங்கம், டி.டி.கே.சாலை, மாலை 6.15.