புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை
அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை, தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எப்படி மீட்பது, அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, மழை காலங்களில் மின்சாதனப் பொருள்களை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும், விபத்து தடுப்பு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்பாட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும். தீத்தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா்.
மேலும், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மருத்துவா்கள், பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரா்கள் வழங்கினா்.