இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை
கமுதி அருகே அரியமங்கலம், இடிவிலகி ஊராட்சி கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீரும் கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
இடிவிலகி ஊராட்சிக்குள்பட்ட கோசுராமன் கிராம மக்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்படுகிறது. இந்தக் குடிநீா் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கருப்பு நிறத்தில் உள்ளது. இதனால் ஒரு குடம் தண்ணீா்ரூ.15 க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.
குடிநீா் அசுத்தமாக உள்ளதால் தொற்று நோய் அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனா். எனவே, கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா் நேரடியாக சென்று ஆய்வு செய்து சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.