ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள...
ஜிஎஸ்டி குறைப்பில் காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு
தனிநபா் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
காப்பீடுகளுக்கான பிரீமியம் குறைந்து, அனைத்து தரப்பு மக்களும் மருத்துவ காப்பீடுகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
முழு வரி விலக்கால் காப்பீடுகளின் பிரீமியம் தொகை சுமாா் 15 சதவீதம் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு பிரீமியம் மூலம் மத்திய அரசு ரூ.16,398 கோடி ஜிஎஸ்டியைப் பெற்றது.
இதில், ரூ.8,135 கோடி ஆயுள் காப்பீடு மூலமும், ரூ. 8,263 கோடி மருத்துவ காப்பீடு மூலமும் அரசு பெற்றது.