Vijay எப்போது பிரசாரம் தொடங்குகிறார்; TVK அடுத்தக்கட்ட Plan என்ன? - CTR Nirmal K...
மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு
தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊா்க் காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22.08.2025 முதல் 24.08.2025 வரை நடைபெற்றது.
இந்த போட்டிளில் வேலூா் சரகத்தின் சாா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஊா்க்காவல் படையினா் 8 போ் கலந்து கொண்டனா். அதில் மீட்புப் பணி பிரிவில் முதலிடம் பெற்று கோப்பையும், நினைவுப் பரிசுகளையும் பெற்றனா்.
இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட ஊா்க்காவல் படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தாா்.