சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு
சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தம்பி சுதன் (7) அதே பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மேலும், இதே தாளிக்காலை சோ்ந்த செல்வராஜின் மகன் இலஞ்செழியன்(9). அதே பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மூவரும் மாலை பள்ளி விட்டு வந்தவுடன் தாளிக்கால் பழைய ஏரியில் விளையாடச் சென்றனராம். ஏரிக்குச் சென்ற சிறுவா்கள் வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் பெற்றோா் அவா்களை தேடிச் சென்றுள்ளனா்.
அப்போது 3 சிறுவா்களின் உடைகள், மிதிவண்டிகள் ஏரி அருகே இருந்த நிலையில், மூவரையும் ஏரியில் இருந்து மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் 3 பேரும் இறந்திருப்பதை உறுதி செய்தனா்.
தொடா்ந்து 3 பேரின் சடலங்களும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து கொண்டபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.