செய்திகள் :

Yamuna Flood: கனமழையால் யமுனையில் வெள்ளப்பெருக்கு; தத்தளிக்கும் டெல்லி - ரெட் அலர்ட் எச்சரிக்கை

post image

டெல்லியில் வெள்ளப்பெருக்கு

டெல்லியில் நேற்றிரவு பெய்த மழையால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லியின் டிரான்ஸ்-யமுனா பகுதிகளில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. யமுனா பஜார் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மத்திய நீராய்வுக் குழுவின் (Central Water Commission) தகவலின்படி, இன்று காலை 9 மணியளவில், பழைய யமுனை பாலத்தில் ஆற்றின் நீர்மட்டம் யமுனையின் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி, 205.81 மீட்டர் உயரத்தை எட்டியது. இந்த நீர்மட்டம் மேலும் உய்ந்து, இன்று இரவு 206.41 மீட்டர் வரை செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும், மத்திய நீராய்வுக் குழுவின் காலை 8 மணிக்கான தகவலின்படி, ஹத்னிகுண்ட் அணையிலிருந்து 1.76 லட்சம் கனஅடி, வசிராபாத் அணையிலிருந்து 69,210 கனஅடி, ஓக்லா அணையிலிருந்து 73,619 கனஅடி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. ஓக்லா அணையில் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளதால், யமுனையில் வெள்ளப்பெருக்கு மேலும் தீவிரமாகியுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

மயூர் விஹார் மற்றும் அதனைச் சுற்றிய கிழக்குக் கரைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் கால்வாய்களாக மாறி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

யமுனா பஜார் பகுதியில், யமுனையின் கரைகள் உடைந்து அதன் அருகிலுள்ள குடியிருப்பு காலனிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் உயரமான இடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

படகுகள் மூலம் வெளியேறும் மக்கள்

மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் படகுகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். வெள்ள அபாயம் அதிகமாக உள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், வெள்ளம் அதிகரிக்கும் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ரோந்து சென்று, விரைவான நடவடிக்கைக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலுக்கிய நிலநடுக்கம்

நேற்று ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிற்கு அருகே இருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 ... மேலும் பார்க்க

J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அச்சம்!

ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு,... மேலும் பார்க்க

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்டது மேக வெடிப்பா? - உண்மை என்ன? - விளக்கும் பிரதீப் ஜான்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் வெள்ளம்: 'பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'- பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகுத... மேலும் பார்க்க

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்; 10-க்கும் மேற்பட்டோர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகு... மேலும் பார்க்க