செய்திகள் :

இபிஎஸ்-ஐ புகழ்ந்து பேசிய விவசாயச் சங்க நிர்வாகி; கண்டித்த தொழில்துறை பிரமுகர்; கூட்டத்தில் சலசலப்பு

post image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது அடுத்த கட்ட நகர்வை வருகின்ற 5 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளதால் மதுரை மாவட்ட பிரசாரப் பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் மதுரை ஜி.ஆர்.டி ஹோட்டலில் அ.தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மதுரை மாவட்ட தொழில்துறையினர், விவசாயச் சங்கத்தினர், பல்வேறு தொழில் சார்ந்த சங்க பிரதிநிதிகளுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி இறுதியாகப் பேசும்போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில் முனைவோருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்போம். அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றினோம்.

10 ஆண்டுகளில் இரண்டு முறை மாநாடு நடத்தி வெற்றிகரமாக முதலீட்டாளர்களை ஈர்த்துப் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்தோம்.

மதுரை விமான நிலைய தரம் உயர்த்தும் விவகாரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதாகச் சொன்னதால் அந்தப் பணிகள் முடங்கியது. இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய சுரங்க வழிப்பாதைக்கும் அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசுடன் இணைந்து சர்வதேச விமான நிலையம் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்போம்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. காவல்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தது. தொழில் செய்பவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தோம், இருப்போம். தொழில் துறையினருக்கான புதிய தொழில் தொடங்குவதற்கு சிங்கிள் விண்டோ சிஸ்டம் உருவாக்கப்படும்.

மதுரை ஒரு ஆன்மீக பூமி. மதுரையின் சுற்றுலா சார்ந்த மேம்பாட்டுக்கு நிறைய வசதிகளைச் செய்து கொடுப்போம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டு வந்தது நாங்கள்தான்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயச் சங்கப் பிரமுகர் அ.தி.மு.க ஆட்சியையும், எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்தும், தி.மு.க அரசை இகழ்ந்தும் பேசியதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் மற்றொரு தொழில்துறை நிர்வாகி எழுந்து நின்று கண்டித்துப் பேசியதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்பு ஒருவித சலசலப்புடன் இந்தக் கூட்டம் முடிந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

BRS: "மிகவும் வேதனையளிக்கிறது" - சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய KCR மகள் கவிதா

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் கடந்த ஆட்சியில் காலேஷ்வரம் அணை கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ரேவந... மேலும் பார்க்க

விழுப்புரம்: திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்! - நகராட்சி ஆணையர் அறையில் நடந்து என்ன?

ஆட்டம் கண்ட நகராட்சிக் கூடாரம்விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்க... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: `தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க' - எம்.பி கமல்ஹாசன் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் தற்போது விவாதமாகியிருக்கும் சிக்கலில் ஒன்று தெருநாய் விவகாரம். இந்தியாவிலேயே ரேபிஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்று. எனவே தெருநாய்கள் விவகாரத்தில் உடனடியாக... மேலும் பார்க்க

``இந்தியா உடனான உங்களது உறவை மதிக்கிறேன்; ஆனால்'' - புதினிடம் பாகிஸ்தான் பிரதமர் பேசியது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என இரு நாள்களாக சீனாவின் தியான்ஜின்னில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது.அதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த உச்சி மாநா... மேலும் பார்க்க