அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
15 பேர் கொண்ட அணியை லாரா வோல்வர்ட் கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்
லாரா வோல்வர்ட் (கேப்டன்), அயபோங்கா காஹா, சோல் டிரையான், நடின் டி கிளர்க், மாரிசேன் காப், தஸ்மின் பிரிட்ஸ், சினோலா ஜாஃப்டா, நான்குலுலேகோ மிலாபா, அன்னேரி டெர்க்சன், அனிக்கி போஸ்ச், மஸபட்டா கிளாஸ், சூன் லூஸ், கரபோ மேசோ, டுமி செகுகுன், நொண்டுமிசோ ஷாங்கேஷ்.
ரிசர்வ் வீராங்கனை
மியான் ஸ்மிட்
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
The South African Cricket Board has announced the squad for the ICC Women's ODI World Cup.
இதையும் படிக்க: கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!