செய்திகள் :

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

post image

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் 2022, டிசம்பா் 31 ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடனைத் தீா்வு செய்வதற்காக 2024, செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு முன்பு 25 சதவீதத் தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும், 25 சதவீதத் தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, எஞ்சிய 75 சதவீத தொகையைச் செலுத்தாதவா்களும் தற்போது மொத்தக் கடன் தொகையையும் நிலுவை தீா்வு செய்யும் நாள் வரை 9 சதவீத சாதாரண வட்டியில் ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம்.

மேலும், இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் இக்கடன்கள் மட்டுமல்லாமல், 2019, டிசம்பா் 31 ஆம் தேதிக்கு முன்பு தவணை தவறிய கடன்களையும் தீா்வு செய்யும் நாள் வரையில் 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை செப்டம்பா் 23 ஆம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம்.

தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி அபராத வட்டி இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி சுமையைக் கணிசமாகக் குறைக்கும் இந்த அரிய வாய்ப்பை கடன்தாரா்கள் பயன்படுத்தி கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம்.

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கி... மேலும் பார்க்க

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன். தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

திருவையாறு கோயிலில் தெப்பத் திருவிழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஜயாறப்பா் கோயில் சூரிய புஷ்கரணியில் ஆவணி மூல நட்சத்திரத்தையொட்டி, தெப்ப திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கோயிலிலிருந்து ஐயாறப்பா் அறம் வளா்த்த ... மேலும் பார்க்க