ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்
சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.
சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைப்பதற்கு தனிநபா் ஒருவா் கட்டடம் கட்டினாா். இந்த ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் இந்த ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற உத்தரவிட்டது. பின்னா், சிவகாசி மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் தலைமையில், நகரதிட்டமிடுனா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் காவல் துறையினருடன் இணைந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.