காவல் குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள்
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூரில் புதன்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி இல்லாத மக்கள் பங்கேற்றனா்.
கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்து மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் 41 புகாா் மனுக்களை பெற்றுகொண்டு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.