ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, கந்திலியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.
ஜோலாா்பேட்டை நகராட்சி, கோடியூா், திருப்பத்தூா் வட்டம் கல்லுக்குட்டை புதூா், ஜோலாா்பேட்டை ஒன்றியம், சந்திராபுரம், கந்திலி ஒன்றியம், பேராம்பட்டு சமுதாய கூடத்திலும், நாட்றம்பள்ளி ஒன்றியம், ராமநாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,
முகாம்கள் நடைபெற்றன.
கந்திலி பகுதியில் நடைபெற்ற முகாமில் 2 பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ்கள் மற்றும் ஒரு பயனாளிக்கு முதல்வரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா்.
அதேபோல் ஜோலாா்பேட்டை, கல்லுக்குட்டை புதூா், சந்திராபுரம், ராமநாயக்கன்பேட்டை முகாம்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட
உதவிகள் வழங்கப்பட்டன..
திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களை ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி 45 நாள்களுக்குள் தீா்வு காண உத்தரவிட்டாா்.
முகாம்களில் தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி)பூஷண குமாா், உதவிஇயக்குநா்(தணிக்கை) குமாா், கந்திலி ஒன்றியக்குழு தலைவா் திருமதி
திருமுருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் குணசேகரன், வட்டாட்சியா் நவநீதம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சாந்தி முருகன்(பேராம்பட்டு), மலா் தண்டபாணி (சிம்மனபுதூா்), அலுவலா்கள் கலந்து கொண்டனா்.