நாணயங்களை விழுங்கிய பள்ளி மாணவி
திருப்பத்தூரில் 2-ஆம் வகுப்பு மாணவி இரு நாணயங்களை விழுங்கிய நிலையில் திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றினா்.
திருப்பத்தூா் கோட்டை தெரு பகுதியை சோ்ந்த தில்ஷாத் மகள் நிஸ்பா (7) இவா் பூங்கா அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிஸ்பா 1 ரூபாய் நாணயம், 2 ரூபாய் நாணயங்களை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தாா்.
அப்போது வாயில் போட்டு கொண்டு அந்த சிறுமி விளையாடிய போது 2 நாணயங்களும் தொண்டையில் சிக்கி உள்ளன.
இதனால் அந்த குழந்தை அழுது கொண்டு இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினா் மீட்டு உடனடியாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பாா்த்ததில் நாணயங்கள் உணவுக் குழாயில் சிக்கி இருந்துள்ளது.
மருத்துவா்கள் குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அறுவை சிகிச்சை அரங்கில் 2 நாணயங்களையும் வெளியே எடுத்தனா்.
அதையடுத்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.