திருப்பத்தூரில் பலத்த மழை
திருப்பத்தூா் சற்றுப்பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட் பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
அதே போல் இரவு மீண்டும் திருப்பத்தூா், ஆதியுா், கொரட்டி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிா்ந்த சூழல் நிலவியது.