செய்திகள் :

Doctor Vikatan: தினமும் 3 லிட்டர் தண்ணீர் பரிந்துரை; குடித்தால் வாந்தி உணர்வு - தீர்வு என்ன?

post image

Doctor Vikatan:  ஒவ்வொருவரும் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சிலர், காலையில் எழுந்ததுமே சொம்பு நிறைய தண்ணீர் குடிப்பதைப் பார்க்கிறோம். ஆனால், சிலருக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலோ, அளவுக்கு அதிகமாக குடித்தாலோ வாந்தி உணர்வு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்வது... தண்ணீர் தேவையை எப்படி பேலன்ஸ் செய்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

மனித உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது தண்ணீர்.
தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும்.
உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது தலைச்சுற்றல், மயக்கம், களைப்பு, தலைவலி போன்றவை வரலாம்.
உடலில் நீர்வறட்சியால் சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படும். தண்ணீர் குடித்ததும் தலைவலி குணமாவதை உணர்வார்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டு போகும், உதடுகள் வெடிக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.
எனவே, தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்பதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பது நல்லது.

நீங்கள் குறிப்பிட்டதுபோல, வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டல், வாந்தி உணர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, புதினா இலைகளுடன் குடிக்கலாம்.

நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோர் ஆக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்துவதும் செரிமானத்திற்கு நல்லது. உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

தண்ணீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்து புதினா இலைகள் சேர்த்துக் குடிக்கலாம்.

சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நீர்வறட்சியைத் தவிர்க்கும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதய நோயாளிகளும், மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.

மற்றபடி, குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும்.

தண்ணீர் குடிப்பதை நினைவில் வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்ததும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Russia: ``ட்ரம்பின் பேச்சுவார்த்தைகள், முயற்சிகள் இதுவரை தோல்வியே'' - புதின் சொல்வதென்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையே பிப்ரவரி 2022 முதல் போர் நடந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன.இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் ப... மேலும் பார்க்க

US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் 'தொழிலாளர் தினம்' கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் ... மேலும் பார்க்க

ட்ரம்ப் விதித்த வரிகள்: அமெரிக்காவிற்கு கிடைத்த லாபம் எவ்வளவு? - கருவூல செயலாளரின் புள்ளிவிவரம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த வரிகள் அமலுக்கு வந்துவிட்டன.இதனால், அமெரிக்காவிற்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்காவின் க... மேலும் பார்க்க

``ரூ.50 கோடியில் கட்டி, முதல்வர் ஸ்டாலின் திறந்த பஸ் ஸ்டாண்ட் பயனில்லை'' -குமுறும் சோழவந்தான் மக்கள்

முதலமைச்சர் தொடங்கி வைத்தும், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக வராமல் முடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின... மேலும் பார்க்க

TVK: புதுச்சேரியில் புதிய கூட்டணியை அமைக்கிறாரா விஜய்? - தவெக விளக்கம்

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரியில் தவெக ஒரு புதிய கூட்டணியை அமைக... மேலும் பார்க்க

``அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதி; புதின், கிம் ஜாங் வாழ்த்துகள்'' -கோபத்தில் ட்ரம்ப்: என்ன காரணம்?

இரண்டாம் உலகப் போர் முடிவின் 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று சீனாவில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடந்தது.இந்த அணிவகுப்பை 26 உலக நாடுகளின் தலைவர்கள் கண்டுகளித்தனர். இதில் மிக முக்கியமாக கவனிக... மேலும் பார்க்க