உலகின் மிகப்பெரிய அரண்மனை: 500 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் பேலஸ...
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!
அதிமுக பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிராகரிப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது.
முன்னதாக, அதிமுகவின் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு எதிரான 2 வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.