சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்
சிவகார்த்திகேயனின் மதராஸி: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!
திரையரங்குகளில் இந்த வாரம் 5 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன. எந்தெந்தத் திரைப்படங்கள் நாளை(செப். 5) வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.
மதராஸி
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படம் நாளை (செப். 5) வெளியாகிறது.
காந்தி கண்ணாடி
நடிகர் பாலா இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
பேட் கேர்ள்

இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் உருவான பேட் கேர்ள் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்க, அஞ்சலி சிவராமன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
காட்டி

கிரிஷ் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் காட்டி. மேலும், இப்படத்தில் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா வெளியீடாக இப்படம் நாளை வெளியாகிறது.
தி கான்ஜிரிங் லாஸ்ட் ரைட்ஸ்

பிரபல ஆங்கில மொழிப் படமான தி கான்ஜிரிங் லாஸ்ட் ரைட்ஸ், நாளை வெளியாகிறது.
இதையும் படிக்க: 40 படங்களில் நடித்துவிட்டேன், ஆனால்... துல்கர் சல்மான் பேச்சு!