செய்திகள் :

நாய் வளர்ப்போர் கவனத்துக்கு.! மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3000 அபராதம்!

post image

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் இல்லாவிட்டால் ரூ.3000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாகவே தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் சாலைகளில் செல்பவர்களை துரத்தி கடிக்கும் பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவது பல்வேறு கவலைகளை அதிகரித்துள்ளது.

நாய்கள் கடித்து உயிரிழப்பது ஒருபுறம் இருந்தாலும், நாய்கள் குறுக்கே பாய்ந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் விபத்துகளால் ஆட்டோக்களில் செல்வோர் பலியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வீடுகளில் நாய்கள் வளர்ப்போர் தங்களது நாய்களுக்கு உடல்நலக்குறைவு, நோய் பாதிப்பு அல்லது நாயை பராமரிக்க முடியாவிட்டாலோ சாலையில் விட்டுச் செல்கின்றனர். இதனால், தெரு நாய்கள், வீட்டில் வளர்க்கும் நாய்கள் என நாய்யைக் கண்டாலே பொது மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதனை உடனடியாகத் தடுக்க சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்த சென்னை பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

மைக்ரோ சிப் பொருத்தாத வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,000 பேர் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளர்ப்போர் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதற்கு சென்னை மாநகராட்சியில் ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதற்கு மைக்ரோ சிப்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், மைக்ரோ சிப் பொருத்துவது குறித்து தனியார் மற்றும் அரசு கால்நடை சுகாதார மையங்களில் விரைவில் வழிமுறைகள் வெளியிடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது வாய்மூடி கட்டாயம் அணிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Attention dog lovers! Failure to implant a microchip will result in a fine of Rs. 3000!

இதையும் படிக்க : அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: செப்.8 முதல் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (03-09-2025) காலை வடக்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்... மேலும் பார்க்க

பைக் தீப்பற்றி புகைமூட்டம்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..!

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றிப் புகைந்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் தேங்காய் உடைத்து வழிபட்ட சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிராகரிப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதிமுக பொதுச் செயலராக எடப்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு எதிரொலியால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.கர்நாடக மாநில அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. ... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க