செய்திகள் :

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

post image

மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிகிதத்தின் எதிரொலியால் ஐபிஎல் டிக்கெட்டின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நேற்று(செப். 3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இந்த வரிவிகித அறிவிப்புகள் வருகிற 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் நிலையில், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி விதிப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

குளியல் பொருள்கள், நெய் மற்றும் பால் பொருள்கள், குழந்தைகளுக்கான உணவு பாட்டில்கள், டயப்பர்கள் மற்றும் நாப்கின்கள் போன்றவைக்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதேவேளையில் ரேசிங், கிளப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டணங்கள் 28 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இந்தியாவில் கோடைக்கால விடுமுறைகளை மையமாக வைத்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் லீக் போட்டியாகவுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளுக்கு தனி மவுசு இருந்தாலும், சென்னை, பெங்களூரு, மும்பை அணிகளின் போட்டிகளைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆன்லைன் காத்திருந்து டிக்கெட் கிடைக்காத விரக்தியில் கள்ளச்சந்தைகளிலும் டிக்கெட்டுகளை வாங்குகின்றன.

நேரில் டிக்கெட் விற்பனை என்று கூறினாலும், அங்கும் ஐபிஎல் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போது ஐபிஎல் டிக்கெட்டுக்கான வரிவிகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

புதிய வரிவிகிதத்தின் அடிப்படையில் ஐபிஎல் டிக்கெட்டின் விலை ரூ.500 டிக்கெட் ரூ.640 லிருந்து ரூ. 700 ஆகவும், ரூ.1,000 டிக்கெட் ரூ.1,280 லிருந்து ரூ.1,400 ஆகவும், ரூ.2,000 டிக்கெட் ரூ.2,560 லிருந்து ரூ. 2,800 ஆகவும் உயர்ந்துள்ளது.

இருப்பினும், ஐபிஎல்லை போன்றே இந்திய சூப்பர் லீக், புரோ கபடி லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இந்த வரிவிகிதத்தில் வருமா? என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

Watching IPL Live Just Got Costlier! New GST Hike Pushes Stadium Tickets into Luxury Bracket

இதையும் படிக்க : இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில்... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள... மேலும் பார்க்க

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது. பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோ... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட... மேலும் பார்க்க

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீர... மேலும் பார்க்க