அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந...
பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி: கொள்கை, அரசியல் வித்தியாசம் என்ன? -தவெகவுக்கு சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது வாக்குப் பதிவு நேர்மையாக தான் நடந்தது என்பதை எங்கு வந்து சத்தியம் செய்வார்கள். மின்னணு வாக்கு இயந்திரத்தில் பிரச்சினைகள் இருப்பது எல்லாருக்கும் தெரியும்

மின்னணு வாக்கு இயந்திரம்
மின்னணு வாக்கு இயந்திரத்தை எத்தனை நாடுகள் பயன்படுத்துகின்றன? அந்த இயந்திரத்தை தயாரித்து வழங்கும் ஜப்பான் இதை பயன்படுத்துகிறதா?
உலகில் மூன்று நாடுகள் மட்டுமே இதை பயன்படுத்துகின்றன: வங்கதேசம், நைஜீரியா மற்றும் இந்தியா. இந்த மூன்றுமே ஊழல் அதிகம் உள்ள நாடுகள்.
ஈரோடு கிழக்கு தேர்தல்
ஈரோடு கிழக்கு தேர்தலில் கூடுதலாக 500 ஓட்டுகள் கிடைத்தால் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவோம். ஆனால், டெபாசிட் மீட்கக்கூடாது என்கிற காரணத்தால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வாக்கெண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இயந்திரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாய்கள் பிரச்னை
கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்புக்கு சென்று விட்டன. ஆனால், நாம் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை.
நாய்களை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகி, பிளேக் நோய் பரவுவதற்கான ஆபத்து உள்ளது. அனைத்து உயிர்களையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். நாய்களை பராமரித்து, தடுப்பூசி செலுத்த வேண்டும்.
கொள்கைக்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?
தவெகவைப் பொறுத்தவரை, பாஜக அவர்களுக்கு கொள்கை எதிரியும், திமுக அரசியல் எதிரியும் என்றால், கொள்கைக்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?
அப்படியென்றால், காங்கிரசையும், அதிமுகவையும் தவெக புனிதப்படுத்துகிறதா? ஏன் காங்கிரசைப் பற்றி எதுவும் சொல்லவில்லை? அது குற்றமற்ற கட்சியா? மன்னர் ஆட்சியின் தொடக்கமே காங்கிரஸ் தான்.

கவுன்சிலர் பேச்சு
திண்டிவனத்தில் கவுன்சிலர் பட்டியலின் மக்களை தரக்குறைவாக பேசியதை நாட்டின் மிகப்பெரிய அவமானமாக நினைக்கிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்று செய்பவர்களுக்கு கல்வி சான்றிதழ் செல்லாது, கடவு சீட்டு இல்லை, குடும்ப அட்டை இல்லை, வாக்குரிமை இல்லை என அனைத்தையும் நீக்கி விடுவோம்,” என்றார்.