செய்திகள் :

`விஜய் கட்சி, அந்த 2 சமூக வாக்குகளை டார்கெட் செய்கிறது’ - 9 தொகுதிகளை அலசிய அமைச்சர் எ.வ.வேலு

post image

செப்டம்பர் 3-ம் தேதியான நேற்று... வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தி.மு.க-வின் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை நடத்தினார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தி.மு.க மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரின் ஹோட்டலில் நடந்த அந்தக் கூட்டத்தில் தொகுதி வாரியாக நிலவும் பிரச்னைகளை அடுக்கி எம்.எல்.ஏ-க்களையும், கட்சி நிர்வாகிகளையும் விளாசி எடுத்துவிட்டாராம் எ.வ.வேலு.

இது குறித்து, தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ``ஆலோசனைக் கூட்டத்தில், குறிப்பாக வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மீதான கடும் அதிருப்திகளை வெளிப்படுத்தி பேசிய அமைச்சர் எ.வ.வேலு, `வேலூர் தொகுதியில் கணிசமாக உள்ள முதலியார்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை நடிகர் விஜய்யின் கட்சி டார்கெட் செய்திருக்கிறது.

ஆலோசனை கூட்டம்

அதேபோல, செட்டியார் போன்ற சமூக வாக்குகளும் ஆன்மிக ரீதியாக பா.ஜ.க-வுக்குப் போக வாய்ப்பிருக்கிறது. இந்தச் சமூக வாக்குகள் அவர்களுக்குப் போய்விடக் கூடாது என்பதை மனதில் வைத்து தேர்தல் பணியாற்றுங்கள்’ என்றாராம். அதுமட்டுமல்லாமல், `வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாரிடமும், வேலூர் எம்.பி கதிர் ஆனந்திடமும் எம்.எல்.ஏ கார்த்திகேயன் நல்ல அணுகுமுறையில் இல்லை. மாற்றுக் கட்சிகளில் இருந்து தி.மு.க-வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ஞானசேகரன், நீலகண்டன் ஆகியோர் உட்பட நான்கைந்து பகுதி செயலாளர்களையும், மேலும் சில மூத்த நிர்வாகிகளையும் எம்.எல்.ஏ கார்த்திகேயன் சரியாக அரவணைக்கவில்லை.

வேலூர் தொகுதியில், வன்னியர் சமூகத்துக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை’ எனக் குற்றச்சாட்டு வந்திருப்பதாகவும் அமைச்சர் எ.வ.வேலு கூறினாராம். அதற்குப் பதிலளித்த வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், `வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கட்சியினருக்கு வட்டச் செயலாளர் போன்ற பதவிகளைக் கொடுத்திருக்கிறோம். இதற்கு மேலும் தர வேண்டுமென்றாலும் வழங்கத் தயாராக இருக்கிறோம்’ என்றார்.

`காட்பாடி தொகுதியை பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் பார்த்துக்கொள்வார்’ என்று ஒருவரியோடு கடந்து சென்றுவிட்டார் எ.வ.வேலு. கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளர் விவகாரத்தில் எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிராக அவரின் உறவினரான காங்குப்பம் வி.டி.சிவகுமார் என்பவர் ஆட்சேபனை தெரிவித்தாராம்.

அமைச்சர் எ.வ.வேலு

வரும் தேர்தலில், ஆற்காடு தொகுதியில் `சீட்’ எதிர்பார்க்கும் அமைச்சர் துரைமுருகன், எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோரின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் ராணிப்பேட்டை மாவட்டப் பொருளாளர் ஏ.வி.சாரதியை ஓரங்கட்டும் முயற்சியில் அந்த மாவட்ட அமைச்சர் காந்தியும், ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனும் கூட்டாகச் சேர்ந்து காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியானது.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் ஏ.வி.சாரதிக்கு அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை. இதையும் கவனித்து, அமைச்சர் காந்தியிடமும், எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனிடமும் கேள்வியெழுப்பினார் எ.வ.வேலு. இதேபோல, இரண்டு மாவட்டங்களிலுள்ள மற்றத் தொகுதிகளின் பிரச்னைகளையும் அலசினார். `நான் இப்போது கேட்டதெல்லாம், நானாக விசாரித்தவை இல்லை. பென் டீம், உளவுத்துறை தயார் செய்து முதலமைச்சரிடம் கொடுத்தது. அந்த ரிப்போர்ட் தான் என்னிடம் இருப்பது’ என்றும் எ.வ.வேலு கடுமை காட்டினாராம். முடிவாக, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, ஸ்வீட், ஐஸ்கிரீம் என பஃபே விருந்துடன் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கவனிப்பும் இருந்ததாம்’’ என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எ... மேலும் பார்க்க

GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்வதென்ன?

ஜிஎஸ்டி மாற்றம்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக... மேலும் பார்க்க

திமுக பெண் கவுன்சிலர் காலில் நகராட்சி ஊழியர் விழுந்த விவகாரம்! – 10 பேர் மீது வன்கொடுமை வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையேய... மேலும் பார்க்க