Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்...' - சீமான்
40 படங்களில் நடித்துவிட்டேன், ஆனால்... துல்கர் சல்மான் பேச்சு!
லோகா திரைப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பேசியுள்ளார்.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டி பெரிய வெற்றிப் படமாகியுள்ளது.
ஓணம் வெளியீட்டை முன்னிட்டு வெளியான இப்படம் இன்னும் சில நாள்களிலேயே ரூ. 200 கோடி வசூலை நெருங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதன் வெற்றி நிகழ்வில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், “நான் நாயகனாக இதுவரை 40 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டேன். 7 படங்களைத் தயாரித்துவிட்டேன். ஆனால், லோகாவுக்குக் கிடைத்த வரவேற்பு போல் என்னுடைய எந்தப் படத்திற்கும் கிடைக்கவில்லை. இது, சிறிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் அல்ல. கிங் ஆஃப் கொத்தா, குரூப் படங்களுக்கு என்ன செலவானதோ அதே செலவுதான் இப்படத்திற்கும் ஆனது. என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு ரசிகர்களிடமிருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிளாக்பஸ்டரான சூ ஃப்ரம் சோ ஓடிடி தேதி!