2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
ஓடிடியில் நடிகர் தர்ஷனின் சரண்டர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷனின் ‘சரண்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கௌதமன் கணபதி இயக்கத்தில், தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ’சரண்டர்’. கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர் தர்ஷன் முதல்முறையாக காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

அப்பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், மன்சூர் அலிகான்; மலையாள நடிகர்கள் லால், சுஜீத் சங்கர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘சரண்டர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், ‘சரண்டர்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: சிவகார்த்திகேயனின் மதராஸி: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!