சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்
காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங்க" - KPY பாலா
`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.
தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இப்படம் நாளை ( செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று(செப்டம்பர் 3) திரையிடப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாலா, "கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறோம்.
முதல் முறையாக பிரஸ் ஷோ மூலம் படத்தைத் திரையிடுகிறோம். எல்லோரும் என்ன சொல்வார்கள் என்ற ஒரு பதட்டம் இருந்தது.
படத்தைப் பார்த்த பிறகு நிறையப் பேர் வந்து என்னைக் கட்டியணைத்துப் பேசினார்கள். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நிறைய பிரஸ் ஷோக்களுக்கு நான் வந்திருக்கிறேன். இன்று என்னுடைய படத்தின் பிரஸ் ஷோக்களுக்கு வந்திருக்கிறார்கள்.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பையனுக்கு மிகப்பெரிய அன்பையும், ஆதரவையும் கொடுத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி.
நான் மிகவும் எமோஷனலாக இருக்கிறேன். யாரோ ஒருவரின் முகத்தை ஸ்கிரீனில் பார்த்துக் கைத்ததட்டிய எனக்கு, என்னுடைய முகத்தை ஸ்கிரீனில் பார்த்து எல்லோரும் கைதட்டுவதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
ஒரே ஒரு நன்றி மட்டும் நான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த பாலாவின் பாதம் தொட்ட நன்றிகள்.
உங்களின் அன்பும், ஆதரவும்தான் இன்று நான் கதாநாயகனாக நடிப்பதற்குக் காரணம். அதற்காக என்றைக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...