ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூ.
சென்னை ஐஐடி மீண்டும் தேசிய தரவரிசையில் முதலிடம்: ஏழாவது ஆண்டாக ஆதிக்கம்!
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்ஐஆர்எஃப்) 2025 கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர மிகவும் உதவியாக உள்ளது.
அதன் அடிப்படையில் கல்வி அமைச்சகம் 10வது தரவரிசைப் பதிப்பை இன்று அறிவித்தது. ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜெஎன்யு) புதுதில்லி மற்றும் மணிப்பால் உயர் கல்வி அகாடமி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
கல்லூரிகள் பிரிவில் தில்லியில் உள்ள இந்து கல்லூரி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. மிராண்டா ஹவுஸ் மற்றும் ஹன்ஸ்ராஜ் கல்லூரி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
பொறியியல் பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஐஐடி தில்லி மற்றும் ஐஐடி மும்பை ஆகியவையாகும். நாட்டின் சிறந்த மேலாண்மை நிறுவனமாக ஐஐஎம் அகாமதாபாத் உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் ஜாமியா ஹம்தார்ட் புதுதில்லி மருந்தகப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. மருத்துவக் கல்வித் துறையில், புது தில்லி எய்ம்ஸ் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரியாக தனது நிலையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.