மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!
நாய்கள் மீது பிரியம் கொண்டவர்கள் தெருக்களில் உள்ள நாய்களை எடுத்து வளர்க்கலாமே? #Straydogissue
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தற்போது அதிகம் பேசும் விவாத களம் தெரு நாய்கள் பற்றி தான். காரணம் சமீபகாலமாக அதிகமாக நாய்கள் குழந்தைகள், வயதானவர்கள் இரவில் செல்வோர் தூய்மை பணி செய்யும் நபர்கள் என அனைவரையும் அதிகமாக கடித்து உள்ளது.
உயிரிழப்புகள் மற்றும் ரேபீஸ் பாதிப்பு வாகன விபத்துகள் என இத்தனை பிரச்சனைகள் அடுக்காக தெருக்களில் சுற்றி திரியும் நாய்களால் , மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது அனைவரையும் மனரீதியாக பாதிப்பு அடைய செய்யும்.
இது மிகுந்த வேதனையை தரகூடிய ஒன்று. ஆனால் ஒவ்வொரு உயிரையும் கொல்லுவதற்கோ அவற்றை வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. வெளிநாடுகளில் நாய்களை தெருக்களில் அழைத்து வரவும் கடுமையான சட்டங்கள் உண்டு.

அதே போல சட்டங்கள் இங்கும் தேவை பொது இடங்களில் நாய்களை கொண்டு வருவதற்கு சட்டங்கள் இந்தியாவிலும் தேவை. அவற்றின் கழிவுகளை வளர்ப்பவர்களே சுத்தம் செய்ய வேண்டும். தமிழ்நாடுகளில் அதிகம் செலவு செய்து நாய்களை பராமரிப்பவர்கள் தெருக்களில் கொண்டு வந்து அவற்றை விட்டு அப்படியே அழைத்து செல்கின்றன இதை தூய்மை பணியாளர்கள் தான் சுத்தம் செய்கிறார்கள்.இதை தடுக்க வேண்டும்.நாய்கள் இல்லாத நாடு என்று சிங்கப்பூரை சொல்வார்கள்.
ஆனால் அங்கும் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்க்கின்றன. நமது நாட்டில் தெரு நாய்கள் என்று சொல்லப் படுவது நாட்டு நாய்கள் தான். வெளிநாட்டு நாய்களை வாங்கி விரும்பி அதிகம் செலவு செய்து வளர்க்கும் நாய்கள் மீது பிரியம் கொண்ட நபர்கள் தெருக்களில் உள்ள நாய்களை எடுத்து வளர்க்கலாம். இதை அரசாங்கம் வழியுறுத்தலாம்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவற்றை தெருக்களில் இருந்து நீக்கி அரசு உதவியோடு அவற்றை பராமரிக்கலாம். அவற்றின் எண்ணிக்கை குறைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தேவை.
14000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நாய்கள் மனிதர்களோடு வேட்டைக்காகவும், பாதுகாக்க மற்றும் காவல் இவற்றிற்கு பயன்படுத்தி வந்திருக்கின்றன. நாய்கள் மனிதர்களுக்கு தோழமையாகவும் தனிமையை போக்கும் உற்ற துணையாக இருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன. ஒரு இனத்தின் சமநிலை மாறும் போதோ இல்லை அவை இல்லாமல் போகும் போது இயற்கையாக மனிதனுக்கு வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும்.

குறிப்பாக நாய்கள் இல்லாமல் போனால் எலி, பூனை, குரங்கு இவை வீதிகளில் அதிகம் நடமாட தொடங்கிவிடும். இதன் வழியாகவும் பிளேக், ரேபீஸ் போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும். இதனால் அரசாங்கம் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் சிறந்த முறையில் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். எனக்கு சிறு வயதில் அதாவது ஒரு 7 வயது இருக்கும். நான் கடைக்கு போவதற்காக நடந்து சென்ற போது என்னைத் துரத்தியது. ஒட்டம் எடுத்தவள் நிக்கவே இல்லை வீடு வரும் வரை அதன் பிறகு நாய்களை பார்த்தால் பயம் தான் இப்போது வரைக்கும். நாய்க்குட்டியாக இருக்கும்போது அதை பார்ப்பது எனக்கு பிடிக்கும். மனிதனுக்கு இடையூறு எனும் போது கண்டிப்பாக அவற்றை நீக்க வேண்டும். அழிக்க கூடாது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!