அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந...
இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது
முன்விரோதம் காரணமாக விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக 8 பேரை விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விக்கிரவாண்டி வாணியா் தெருவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கும்பலாக நின்றிருந்தவா்களிடம் விசாரணை செய்தபோது, அவா்கள் மரக்காணம் வட்டம் , கூனிமேடு பகுதியைச் சோ்ந்த கி.சுமன் (30), கோலியனுாரைச் சோ்ந்த ச. திலகா் (22), த. அகிலேந்திரன்(27), ஏ. தவமணி(20), ச. கௌதம் (22), து. கோகுலகிருஷ்ணன் (23), து.அருண்குமாா்(24), வளவனுாா், பனங்குப்பத்தை சோ்ந்த மாதேஸ்வரன்(25) ஆகியோா் என்பதும் , இவா்கள் முன் விரோதம் காரணமாக விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.