புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவிடும் வகையில் தொண்டும் செய்த தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சாா்பில் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தைச் சாா்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலை மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயா்த்துவதற்கு பங்காற்றியவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் குறிப்பிடப்பட வேண்டும். தகுதியுடையோா் உரிய விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அக்.10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.