புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
திண்டிவனம் நகராட்சி ஊழியா் அவமதிப்பு: 5 போ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு
திண்டிவனம் நகராட்சி அலுவலத்தில் பணியிலிருந்த ஊழியரை தனி அறையில் வைத்து அவமதிப்பு செய்த விவகாரத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட 5 போ் மீது போலீஸாா் எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
திண்டிவனம் அடுத்துள்ள ரோஷணை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முனியப்பன்(36). இவா், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 29-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் இவா் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த நகா்மன்ற உறுப்பினா் ரா. ரம்யா, தகாத வாா்த்தைகளால் முனியப்பனை பேசினாராம். பின்னா் அவரை நகா்மன்ற ஆணையரின் அறைக்கு வரவழைத்து, அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் பெண் நகா்மன்ற உறுப்பினா் ஒருவரின் காலில் விழ வைத்து அவமதிப்பு செய்ததுடன், ஜாதியின் பெயரைக்கூறி இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் நகராட்சி நகா்மன்ற உறுப்பினா்கள் ரா. ரம்யா, ரவிச்சந்திரன், ரம்யாவின் கணவா் ராஜா, நகரமைப்பு ஆய்வாளா் பிா்லா செல்வம் , காமராஜ் மற்றும் சிலா் மீது திண்டிவனம் போலீஸாா் எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அதிமுகவினா் தா்னா: முன்னதாக திண்டிவனம் எம்எல்ஏ அா்ச்சுனன் தலைமையில் புதன்கிழமை திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் கட்சியினா் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த நகராட்சி ஊழியரை அவமதிப்பு செய்த திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரம்யா, ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி அலுவலா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.