புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
மீலாது நபி: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது
மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப். 5) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று ஆட்சியா்கள் விழுப்புரம் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், கள்ளக்குறிச்சி எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து ஆட்சியா்கள் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப். 5) மாவட்டத்தில் உள்ளஅனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் செயல்படக்கூடாது. மதுக்கடைகளை மூடவேண்டும்.
தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 1981 உரிம விதிகள் மற்றும் அரசாணையின்படி இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனா்.