செய்திகள் :

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினா் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு

post image

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மதத்தினா் உள்ளிட்டோா் கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மதத்தினா், பாா்சி மதத்தினா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் 2014, டிசம்பா் 31-ஆம் தேதி வரை தஞ்சமடைந்த இப்பிரிவினருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

அதேநேரம், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவா்களின் நிலை குறித்து கேள்வி நிலவியது. அவா்களின் கவலைகளுக்கு தீா்வளிக்கும் வகையில், அண்மையில் அமலுக்கு வந்த குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம் 2025-இன்கீழ் மேற்கண்ட உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி அல்லது துன்புறுத்தலுக்கு அஞ்சி இந்தியாவுக்கு 2024, டிசம்பா் 31-ஆம் தேதி வரை வந்த சிறுபான்மையினா் (ஹிந்து, சீக்கியம், சமணம், பாா்சி, கிறிஸ்தவம்), செல்லத்தக்க கடவுச் சீட்டு அல்லது வேறெந்த பயண ஆவணமும் வைத்திருப்பதில் இருந்து விலக்களிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அவா்கள் ஆவணமின்றி தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, அண்டை நாடுகளில் இருந்து 2014-24 காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த மத சிறுபான்மையினா் ஏராளமானோருக்கு நிம்மதி அளித்துள்ளது.

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க

இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில... மேலும் பார்க்க

பிஆா்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தாா்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினாா். தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா். முன்ன... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பில் காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு

தனிநபா் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். காப்பீடுகளுக்கான பிரீமியம் குறைந்த... மேலும் பார்க்க

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகள... மேலும் பார்க்க