ரூ.25 லட்சத்தில் சாலை, கோயில் தளம் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் பேரூராட்சியில் பராசக்தி மாரியம்மன் கோவிலில் தரை தளம் மற்றும் கல்கோவில் பகுதியில் பேவா் பிளாக் சாலைப் பணிகளை எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சத்தில் கோயில் வளாகத்தில் தரைதளம் மற்றும் கல்கோவில் பகுதியில் ரூ.15 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாா். இந்நிலையில் எம்எல்ஏ செந்தில்குமாா் பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தாா்). பின்னா் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
ஆலங்காயம் பேரூராட்சி செயலாளா் சிவக்குமாா், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் தப்ரேஸ், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், முன்னாள் பேரூராட்சி செயலாளா் பாண்டியன், பேரூராட்சி துணைச் செயலாளா் பி.கே.சந்தோஷ், முன்னாள் கவுன்சிலா்கள் ஆா் கே சாமி, முருகன், ராஜேஷ், நகர இளைஞரணி செயலாளா் விஜய், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளா் சந்தோஷ்குமாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.