செய்திகள் :

GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்!

post image

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி அறிவித்த ‘தீபாவளி கிஃப்ட்’ நேற்று வெளிவந்துவிட்டது.

ஆம்... ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.

2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.

இதனால் எந்தெந்தப் பொருள்களுக்கு வரிச் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாக குறைக்கப்படும் பொருள்கள்:

ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்ட பொருட்கள்

  • தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பூ, டூத் பேஸ்ட், டாய்லெட் சோப் பார், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம்

  • வெண்ணெய், நெய், பன்னீர் மற்றும் பால் பொருட்கள்

  • மிக்சர் வகைகள்

  • பாத்திரங்கள்

  • பால் புட்டி, குழந்தைகளுக்கான நேப்கின், கிளினிக்கல் டயப்பர்

  • தையல் இயந்திரங்கள்

விவசாயம் சார்ந்த பொருட்கள்

  • டிராக்டர், டிராக்டர் டயர்கள்

  • குறிப்பிட்ட உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்

  • சொட்டு நீர்பாசன அமைப்பு மற்றும் தெளிப்பான் கருவிகள்

  • மண் தயாரிப்பு, சாகுபடி, அறுவடை மற்றும் கதிரடிக்கும் விவசாய, தோட்டக்கலை அல்லது வனவியல் இயந்திரங்கள்

18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாக குறைக்கப்படும் பொருள்கள்:

மருத்துவம் சார்ந்த பொருட்கள்

  • தெர்மாமீட்டர்

  • மெடிக்கல்-கிரேட் ஆக்ஸிஜன்

  • நோய்க் கண்டறியும் கருவிகள் மற்றும் வினைப்பொருட்கள்

  • குளுக்கோமீட்டர் மற்றும் டெஸ்ட் ஸ்ட்ரிப்கள்

  • கண்கண்ணாடிகள்

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகித வரியாக குறைக்கப்படும் பொருள்கள்:

ஆட்டோமொபைல் துறை

  • பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-ஹைபிரிட், எல்.பி.ஜி. மற்றும் சி.என்.ஜி. கார்கள் (1200 சிசி மற்றும் 4000 மில்லிமீட்டரை தாண்டக்கூடாது)

  • டீசல் மற்றும் டீசல்-ஹைபிரிட் கார்கள் (1400 சிசி மற்றும் 4000 மில்லிமீட்டரை தாண்டக்கூடாது)

  • மூன்றுசக்கர வாகனங்கள்

  • 350 சிசி மற்றும் அதற்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள்

  • பொருட்களை கொண்டு செல்வதற்கான மோட்டார் வாகனங்கள்

மின்னணு பொருள்கள்

  • ஏ.சி.

  • 32 இன்சுக்கு அதிகமான டி.வி.கள் (எல்.இ.டி. மற்றும் எல்.சி.டி. டி.விக்கள்)

  • மானிட்டர்கள் மற்றும் புரொஜெக்டர்கள்

  • பாத்திரம் கழுவும் இயந்திரங்கள்

அமலுக்கு வரும் தேதி
இந்த வரி மாற்றம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

`உங்களுடன் ஸ்டாலின்' ஆற்றில் மிதந்த மக்களின் மனுக்கள் - மூழ்குகிறதா விசாரணை?

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில், காவல்துறை விசாரணை மந்தமாக நடந்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.திருப்புவனம் என்றாலே திமுக அரசுக்கு திருகுவலிதான் போல..!தமிழக மக... மேலும் பார்க்க

GST 2.0: பீடி, குட்கா, புகையிலை.. இன்னும் என்னென்ன பொருள்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது?

நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், சாதாரண மக்களின் முக்கியத் தேவைப் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது.இன்னொரு பக்கம், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் 'பாவப் பொருட்கள்' என்று அழைக்கப்படுக... மேலும் பார்க்க

North Korea: முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன் மகள் - இவர்தான் அடுத்த அதிபரா?

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவருடைய மகளான ஜூ ஏ (Kim Ju Ae)-வை முதன்முறையாக வெளிநாட்டு பயணத்துக்கு அழைத்து வந்துள்ளார்.ஏற்கெனவே ஜூ ஏ, கிம் ஜாங் உன்னின் அரசியல... மேலும் பார்க்க

Kim Jong Un: சீனாவுக்கு ரயிலில் சென்ற கிம் ஜாங் உன்; `நகரும் கோட்டை' பற்றி தெரியுமா?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவின் இரண்டாம் உலகப்போர் முடிவைக் கொண்டாடும் மாபெரும் அணிவகுப்பில் கலந்துகொள்ள நேற்று (செப்டம்பர் 3), தனது பிரத்யேக ரயிலில் மகளுடன் வந்தடைந்தார்.ரஷ்யா, சீனா என எங்கு ப... மேலும் பார்க்க