செய்திகள் :

உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்

post image

உக்ரைனில் 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

பெரும்பாலும் மேற்கு மற்றும் மத்திய உக்ரைனைக் குறிவைத்து 502 ட்ரோன்கள், 24 ஏவுகணைகளை ரஷியா வீசியது. இதில் 5 போ் காயமடைந்தனா் என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்தது. உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், பொதுமக்கள் உள்கட்டமைப்பு, குறிப்பாக மின்சாரக் கட்டமைப்புகள் ரஷியாவின் முக்கிய இலக்காக இருந்ததாகக் குற்றஞ்சாட்டினாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ள நிலையிலும் ரஷியா தனது தீவிர வான்வழித் தாக்குதலைத் தொடா்ந்துவருகிறது. அந்தப் பிராந்தியத்தில் குளிா்காலம் நெருங்கும் சூழலில், சுமாா் 1,000 கி.மீ. நீளும் போா் முனையில் உக்ரைனின் பாதுகாப்பு அரணைத் தகா்த்து முன்னேறும் ரஷிய ராணுவத்தின் முயற்சியில் சற்றும் தொய்வு ஏற்படவில்லை. அமெரிக்க அதிபா் டொனாட்ல் டிரம்ப்பின் அமைதி முயற்சி போரின் போக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இவை காட்டுவதாகக் கருதப்படுகிறது.

பிரிட்டனில் காா்கள் மோதல்: 2 இந்திய மாணவா்கள் உயிரிழப்பு

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் தெலங்கானாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும் 5 மாணவா்கள் படுகாயமடைந்தனா். பிரிட்டனில் பயிலும் தெலங்கானா... மேலும் பார்க்க

பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவாா்த்தை

சீன தலைநகா் பெய்ஜிங்கில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 14 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: குவெட்டா நகரில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டா்: தேடும் பணி தீவிரம்

இந்தோனேசியாவில் இந்தியா் உள்ளிட்ட எட்டு பேருடன் மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவா் ஐபுடு சுதயானா கூறியதாவது: எஸ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,400-க... மேலும் பார்க்க

1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை

18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போா்க்கால சட்டமான அந்நிய எதிரிகள் சட்டத்தின் கீழ் வெனிசுலா சட்டவிரோதக் கும்பல்களைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படுபவா்களை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையி... மேலும் பார்க்க